உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கனும். சனம் – ஆரியின் குப்பை தொட்டி பஞ்சாயத்தை கிளறிய கமல்.

0
876
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஆறு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். ஆனால் 6வது வாரம் நிறைவேறிவிட்டது. இந்த ஐந்து வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.

-விளம்பரம்-

அதே போல இந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பல பிரச்சனைகள் வெடித்தது. அதிலும் பல இடங்களில் சுச்சத்ரா செய்த நாரதர் வேலைகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்களாக நிஷா, ஆஜீத், கேப்ரில்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் டாஸ்க் மூலம் ஆஜீத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் போரிங் போட்டியாளர்களை கமல் தேர்வு செய்ய சொன்னார். இதில் ஜித்தன் ரமேஷ் பாலாஜியை தேர்வு செய்து உள்ளார். ஆனால், பாலாஜி அதனை ஒப்புக்கொள்ளாமல் நான் மற்ற டாஸ்க்குகளில் ஜெயித்ததாக வாதாடுகிறார். இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜியின் ‘Honesty’ பஞ்சாயத்து குறித்து கேபியிடம் பேசி இருந்த கமல், ஷிவானியை மறைமுகமாக தாக்கினார்.

இப்படி ஒரு நிலையில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குப்பை தொட்டியில் சாப்பாடு கொட்டப்பட்டு இருந்ததை பார்த்து ஆரி, சனம் ஷெட்டியிடம் கேட்டார். அதற்கு சனம் ஷெட்டி, நான் கொட்டவில்லை ஆனால், நானாக கூட இருக்கலாம் என்று ஒரு சூப்பரான பதிலை அளித்தார். இதை ப்ரோமோ வீடியோவில் சுட்டிக் காட்டியுள்ள கமல், இது மாதிரி பதிலை எல்லாம் உங்ககிட்ட இருந்து தான் கத்துக்க வேண்டும் என்று கேலி செய்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement