கன்பெஷன் ரூமிற்கு அழைத்து சம்யுக்தாவை எச்சரித்த பிக் பாஸ் – காரணம் இதுதான்.

0
1563
samyuktha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 4 வாரத்தை நிறைவு செய்து ஐந்தாவது துவாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது. அந்த வகையில் இந்த வாரம் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பிரச்சனை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள்கிழமை ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கி இருக்கிறது விஜய் டிவி.சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும் சனம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இத காட்சி நிகழ்ச்சியில் கூட ஒளிபரப்பபடவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சம்யுக்தாவை கன்பெஷன் ரூமிற்கு அழைத்து பிக் பாஸ் வீட்டில் தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறையை நினைவூட்டி உள்ளார் பிக் பாஸ். ஆனால், அதற்கும் சம்யுக்தா ஆங்கிலத்தில் தான் பதில் அளிக்கிறார் என்பது தான் வேடிக்கை.

இது ஒருபுறமிருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, அனிதா, பாலாஜி, அர்ச்சனா, சனம் ஷெட்டி, சோம் சேகர், சுரேஷ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். பல்வேறு தனியார் இணைய தளத்தில் நடத்தப்பட்டுவரும் வாக்கெடுப்புகளில் இந்த வாரம் பாலாஜியை விட ஆரிக்கு தான் அதிக அளவில் வாக்குகள் இருந்து வருவதாக தெரிகிறது மேலும் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement