பிக் பாஸ் பொருளை சேதப்படுத்திய முகென்.! பிக் பாஸ் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா.!

0
35687
Mugen
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்று வெளியான இரண்டு ப்ரோமோவிலும் முகென் மற்றும் அபிராமி இடையே நடந்த பிரச்சனை தான் ஓடியது. இன்றைய முதல் பிரமோவில் முகென், சாக்க்ஷி, அபிராமி ஷெரின் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில் அபிராமியிடம், சாக்க்ஷி ‘நான்முகனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா’ என்று கேட்டகிறார். இதனால் கடுப்பான அபிராமி எப்போதும் நீ உன்னை பற்றி மட்டும்தான் பேசுவாயா என்று அந்த இடத்தை விற்று கோபமாக சென்று விடுகிறார்.

இதையும் பாருங்க : எரிச்சலேற்றிய அபிராமி.! இரண்டே குத்தில் கட்டிலை உடைத்த முகென்.! 

- Advertisement -

அதன் பின்னர் அழுது கொண்டிருக்கும் முகென் அபிராமியை சமாதானம் செய்ய முற்படும்போது அபிராமி எப்போதும் போல சீன் போட்டதால் கோபமடைந்த முகென் கட்டிலை தன் கையால் ஓங்கி அடித்து அதனை உடைத்து தாக்கியுள்ளார். இதனால் அபிராமி தேம்பி தேம்பி அழுகிறார். முகென் இப்படி பிக் பாஸ் வீட்டின் பொருளை சேதப்படுத்தியதால் தற்போது அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை பிக் பாஸ் பொருளை சேதப்படுத்தக் கூடாது என்பது விதி. ஆனால், முகென் வேண்டுமென்றே பிக் பாஸ் பொருளை சேதப்படுத்தியதால் முகெனின் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முகென் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement