தன்னை பற்றி புறம் பேசிய மைனா, 6 வருஷத்துக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சொன்ன ரச்சிதா. அப்படி இருந்தும்

0
976
rachitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரஷிதா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : தகாத உறவுக்கு, தந்தை மகள்னு பேர் வச்சிக்கிட்டாங்க – தாமரை கூறிய அதிர்ச்சி தகவல். வைரலாகும் ஆடியோ.

மைனா – ரச்சிதா நட்பு :

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். ரச்சிதா நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நந்தினியும் இதே சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது இறுதி வரம் வரை வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

புறம் பேசிய மைனா :

மைனா நந்தினியும் ரச்சிதாவும் மிகவும் நெருங்கிய தோழியாக தான் இருப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக நட்பு பாராட்டவில்லை. அதிலும் மைனா அடிக்கடி ரச்சிதா பற்றி அடிக்கடி புறம்பேசி வந்தார். குறிப்பாக ஒரு எபிசோடில் மணிகண்டனிடம் பேசிய மைனா ‘ என்னுடைய திருமணத்திற்கு ரக்ஷிதாவை கூப்பிடவில்லை என்று அவர் என்னுடன் பேசி கொள்வதை நிறுத்திவிட்டார்.

கடுப்பான தினேஷ் :

அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் போது இந்த ஆடை போடக்கூடாது, அந்த ஆடை போடக்கூடாது என்றெல்லாம் ரக்ஷிதா என்னை கட்டாயப்படுத்துவார் என்றெல்லாம் பேசி இருந்தார். இதனால் கடுப்பான ரச்சிதாவின் கணவர் தினேஷ் ’10 ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய நண்பர். ஆனால், நீங்கள் அவரை சேரில் அமர வைத்து மோசமான கேள்விகளை கேட்டிருந்தீர்கள்’ என்று மைனாவை விமர்சித்து இருந்தார்.

மைனா குறித்து ரச்சிதா :

இப்படி ஒரு நிலையில் மைனா குறித்து பேசி இருக்கும் ரச்சிதா ‘மைனாவிற்கு என்னைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரியும் என்ற அளவில் தான் எங்கள் இருவருக்கும் உண்டான உறவு இருக்கிறது. ஆனால், ஆறு வருடங்களுக்கு முன்பு எங்களுக்குள் ஒரு சிறிய கேப் விழுந்து விட்டது. அதற்கு பின்னர் மீண்டும் பிக் பாஸில் தான் சந்தித்தோம். பிக் பாஸில் இந்த ஆறு வருட இடைவேளையில் என்னவெல்லாம் நடந்தது என்பதை பற்றி எல்லாம் இருவரும் பேசிக்கொண்டோம். தற்போதும் மைனா என்னுடைய நெருங்கிய தோழி தான் என்று பேசியிருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

Advertisement