பிக் பாஸில் தனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த கணவர் – நெகிழ்ச்சியுடன் ரச்சித்தாவின் சூசக பதிவு.

0
474
rachitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 சமீபத்தில் நடந்து முடிந்தது. பிக் பாஸ் இந்த சீசனை பொறுத்தவரையில் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா,adk,கதிர், அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான் என 21 பேர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

ரட்சிதா :

இந்த நிழச்சியில் பல போட்டியாளர்கள் தங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும் என்று பல முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களில் பலர் வெகு விரைவாகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். ஆனால் தொடக்கத்தில் இருந்து மிகவும் அமைதியாக இருந்த வந்தவர் ரட்சிதா. யாரும் எதிர்ப்பாராத வண்ணம் அதிக நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இவர் பிக் பாஸுக்கு வருவதற்கு முன்னரே பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நெட்டிசன்களின் எதிர்ப்பு :

ரட்சிதா பிக் பாஸ் வீட்டிற்கு இருந்த போது இவருக்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்தனர், மேலும் ராபர்ட் மாஸ்டருடனான நட்பை பலரும் கலாய்த்தும் மீம்ஸ் போட்டும் வந்தனர். அதோடு பிக் பாஸ் வீட்டில் உள்ள ராபர்ட் மாஸ்டரும் ரட்சித்தாவிடம் பழகிய விதம் அவர் முதல்கொண்டு பார்வையாளர்கள் அனைவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் பலர் ரட்சித்தாவை குறை கூறி வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் ரட்சிதாவுக்கு பாசிட்டிவாக பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்தவர் அவரது கணவர் தினேஷ் தான்.

தினேஷ் பதிவு :

மேலும் ரட்சித்தவை பற்றி அவதூறாக வரும்போதெல்லாம் அதற்கு எதிராக பதிவுகளையும் தினேஷ் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தான் தினேஷ் சமீபத்தில் போட்டிருந்த பதிவு ஒன்றில் ரட்சிதாவை 24 அமணிநேரம் பார்க்க முடிந்தது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியினால் தான். நீங்கள் உண்மையிலேயே பல கூடி மக்களின் இதயங்களை வென்றுளீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

நன்றி சொன்ன ரட்சிதா :

இப்படி பட்ட நிலையில் தான் அதற்கு பதிலளிக்கும் வகையிலும் ஆதரவளிக்கும் வகையிலும் ரட்சிதா மறைமுகமாக பதிவு ஒன்றினை புதிவிட்டுள்ளார். அந்த பதிவில் `எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் மிகவும் நன்றி, நீங்கள் இல்லாமல் என்னால் இதனை சாதித்திருக்க முடியாது என்று மறைமுகமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. மேலும் ரட்சிதா மற்றும் அவருடைய கணவருக்கு இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகி அவர்கள் இருவரும் ஒன்றாக இனைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

Advertisement