ADK, அசீமை பிடிக்காததற்கு காரணம் – பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தவுடன் ரட்சிதாவின் முதல் Live இதோ.

0
613
rachitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 8 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-
rachitha

எதிர்பாராமல் வெளியேறிய ரட்சிதா :

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் அமுதவாணன், Adk இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது

- Advertisement -

ரட்சிதா நடித்த சீரியல்கள் :

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார். ஆனால், திடீர் என்று இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார்.

ஆனால், ரச்சிதா இப்படிப்பட்ட ஆளே கிடையாது அவர் வெளியில் படு போல்டாக இருப்பார் என்று அசீம் அடிக்கடி கூறி வந்தார். மேலும், ஒரு ஏபிசோடில் பார்வையாளர்கள்  கூட பிக் பாஸ் வீட்டிற்கு நீங்கள் பெய்டு விடுமுறைக்கு வந்து இருக்கிறார்களா என்று கேட்க்கும் அளவு ரச்சிதா விளையாடி வந்தார். இதுகுறித்து கமல் பல முறை கூறியும் ரச்சிதா, பிக் பாஸுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-

ADK மற்றும் அசீமை பிடிக்காது :

இதுவே இவரது வெளியேற்றத்துக்கு காரணமாக பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரட்சிதா முதல் முறையாக “லைவில்” வந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவம் குறித்தும், போட்டியாளர்களை குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. தனக்கு ஜனனி, அமுதவாணன், ஷிவின், ஜிபிமுத்து இவர்களை மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினார். மேலும் பிக் பாஸ் வீட்டில் பிடிக்காதது என்று யாரும் இல்லை ஆனால் கருத்து ரீதியாக தனக்கு அசீம் மற்றும் ADKவை பிடிக்காது எனக் கூறினார்.

rachitha

பிடிக்காததற்கு காரணம் :

மேலும் ADK பொறுத்தவரையில் எதுவாக இருந்தாலும் என்னுடன் நேரடியாகவே பேசி இருக்கலாம், பின்னாடி பேசுவதை அவர் குறைத்திருந்திருக்கலாம். அவர் என்னிடம் நேரடியாக பேசியிருந்தாலே அவரை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும் . ஆனால் சமீபத்தில் ஆவர் என்னை பின்னால் பேசியத்தினால் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதை அவர் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் “ராப் பாடகர்” என்ற முறையில் அவர் சிறந்தவர் எனக் கூறினார்.

மேலும் அசீம் ஒரு நல்ல பேசாளர், எதை வேண்டுமானாலும் தன்னுடைய பேச்சால் வாங்கி விடுவார் என்றும், அவர் சில விஷியங்களை சில நேரங்களில் தவிர்த்திருந்தால் கண்டிப்பாக வேறு மாதிரியான அசீமாக பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கலாம். என்று அந்த நேர்காணலில் பேசியிருந்தார் நடிகை ரட்சிதா.

Advertisement