எனக்கு இருக்கும் கடைசி வழி இது மட்டும் தான் – கணவர் மீது புகார் அளித்த பின்னர் ரஷிதா போட்ட முதல் பதிவு.

0
2478
Rachitha
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகை ரஷிதா தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார்.

-விளம்பரம்-

சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை திடீரென்று முடித்து விட்டார்கள். இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிய முடியவில்லை.

- Advertisement -

ரக்ஷிதா குடும்பம் குறித்த தகவல்:

இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. அவர்கள் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாவும் தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் இரவவோடு இரவாக ரஷிதா புகார் அளித்துளர்.

ரஷிதாவின் இன்ஸ்ட்டா ஸ்டோரி :

இந்த நிலையில் கணவர் மீது புகார் அளித்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளை வைத்திருக்கிறார் ரஷிதா அதில், நீங்கள் அமைதியை உருவாக்கிகொண்டால், மற்றவர்களுக்கு எப்போது தாக்க வேண்டும் என்பது தெரியாது (When you build silence, people don’t know when to attack) என்றும் மற்றொரு ஸ்டோரியில், பலமாக இருப்பது தான் கடைசி வழி (Being strong is the only option left ) என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தினேஷ் விளக்கம் :

இப்படி தினேஷ் பேட்டியில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி குறித்து கூறியதற்கு அவர் சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், ரக்ஷிதாவுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக தான் நட்பு. தினேஷ் என்னை தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறார். அவதூறாக என்னைப் பற்றி மீடியாவில் பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் தினேஷ் இடம் பேசி இருக்கிறது. அதற்கு அவர், எங்கள் பிரச்சனையில் ஜிஜி யின் தலையீடு இருப்பதற்கு தகுந்த ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் நான் நேரில் போய் கேள்வி கேட்பேன் என்று சொன்னதை அடிப்படையாக வைத்து புகார் கொடுத்திருக்கிறார்.

அவர்களுக்கு எங்க விவகாரத்தில் தலையீடு இல்லை என்றால் அவரே என்னை சந்தித்து விளக்கி இருக்கலாம். நான் அவருக்கு தெரியாத ஆளில்லை. அதை விட்டுவிட்டு திருடனுக்கு தேள் கொட்டியது போல் என் மீது புகார் தந்ததை பார்க்கும்போது என் சந்தேகம் இன்னும் வலுவாகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த புகாரில் சில பெயர்களையும் சேர்த்து அவர்களையும் இந்த பிரச்சனைக்குள் இழுத்து விட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தை திசை திருப்பத்தான் இதை செய்திருக்கிறார் என்று எனக்கு நினைக்க தோணுது. அடுத்தவர்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement