பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ‘டிப்ஸ்’ கொடுத்த ரைசா..! என்ன சொன்னார் தெரியுமா.? விவரம் இதோ

0
1035
- Advertisement -

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் `அட போங்கப்பா’ வசனம் மூலம் பாப்புலர் ஆனவர், ரைசா. நிகழ்ச்சி முடித்த சூட்டோடு பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக `பியார் பிரேமா காதல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது, பாலாவின் `வர்மா’ படத்தில் நடித்திருக்கிறார். ரைசாவிடம் பேசினேன்.

-விளம்பரம்-

raiza nominate gayathiri

- Advertisement -

பாலா சார் டீம்ல இருந்து போன் வந்ததும், எனக்கு செம ஷாக்கிங். `வர்மா’ படத்துல ஒரு முக்கிய கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னாங்க. பாலா சார் படமாச்சே, உடனே ஓகே சொல்லிட்டேன். ஷூட்டிங் முதல்நாள் ரொம்பப் பதற்றமாவும் பயமாவும் இருந்தது. அவரைப் பத்தி நான் சொல்லிதான் தெரியணும்னு இல்லை. ரொம்ப டெடிகேஷனான நபர். ஸ்பாட்ல அவர் மட்டுமல்ல எல்லோருமே அவங்கவங்க வேலையை மெனக்கெட்டு பண்ணுவாங்க.

அவரைச் சுத்தி இருக்கிற எல்லோரும் பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பார். நான் இப்போதான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். உடனே பாலா சார் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பவே சந்தோசம்.

-விளம்பரம்-

raiza

பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போ பார்க்கிறீங்களா… உள்ளே இருக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?”

“தினமும் பார்க்க நேரம் கிடைக்கலை. அப்பப்போ வர்ற கிளிப்பிங்ஸ், புரோமோ மட்டும் பார்ப்பேன். உள்ளே யாரெல்லாம் இருக்காங்கனு தெரியும். ஆனா, என்ன நடந்துக்கிட்டு இருக்குனு தெரியாது. பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிறவங்களுக்கு நான் சொல்ற ஒரே விஷயம், `ஜாலியா இருக்க முயற்சி பண்ணுங்க. ஜாலியா இருங்க’. நாங்க அப்படித்தான் இருந்தோம். சின்னச் சின்ன விஷயங்களுக்காகச் சண்டைகள் வரும். அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு கடந்து போயிடணும்.

Advertisement