பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கென சமூகவலைதளத்தில் ஒரு சில ஆர்மி கூட உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் விஐபி-2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தன.
பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை ரைசா. தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துவரும் ‘காதலிக்க யாரும் இல்லை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஆலிஸ் என்ற படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ரைசா வித்யாசமான ஹர் ஸ்டைலில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் ரைசா. இதனை கண்ட ரசிகர்கள் ரைசாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.