எதுக்கு நான் வரி கட்றேன், என் வரி எங்க போது, பிரதமர் நிதி என்ன ஆச்சி – அரசை கேள்வி கேட்ட ரைசா.

0
1047
Raiza
- Advertisement -

கடந்த 4, 5 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயினால் நாடே ஸ்தம்பித்து போய்யுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மருத்துவர்களும், சுகாதார துறை ஊழியர்களும், துப்புரவு தொழிலாளர்களும் அரசும் போராடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் வட டெல்லி மாநகராட்சியின் கீழ் உள்ள மருத்துவமனையில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள்வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

இந்த விஷயம் குறித்து தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ள ரைசா “மருத்துவர்களுக்கு 3 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லையா? இது உண்மை தானா ? பிரதமர் நிதியை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது என்று சரமாரி கேள்விகளை கேட்டுள்ளார் ரைசா. சமீபத்தில் மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்ற ஒரு கடிதம் இணையத்தில் வைரலாக பரவியது.

- Advertisement -

அந்த கடிதத்தில், கடந்த மூன்று மாதங்களாக வசிக்கும் மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை தெரிவிக்கும் ஒரு கடிதம். ஊதியம் இல்லை, வேலை இல்லை. ஜூன் 16 க்குள் எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று நாங்கள் பயப்படுகிறோம், நாங்களும் வெகுஜனம் தான் எனவே ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் ”, என்று மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பளம் வழங்கப்படாததால் வீட்டு வாடகை துவங்கி வீட்டின் அடிப்படை மளிகை பொருட்களை கூட வாங்க முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரைசா, கடந்த 3 மாதமாக சம்பளம் கொடுக்கப்படவில்லை இது உண்மைதானா ? அப்போது பிரதம மந்திரி நிதியை வைத்துக் கொண்டு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது ? இலவசமாக தங்குமிடம் கிடையாது,எந்த ஒரு உதவியும் வழங்கப்படுவதும் கிடையாது.

-விளம்பரம்-

மருத்துவர்களுக்கு சம்பளமும் கிடையாது ? என்றால் நான் எதற்காக வரியை செலுத்துகிறேன் ? எப்படி என்னுடைய வரிப்பணம் பயன்படுகிறது ? இதனால் ஜிஎஸ்டி திட்டம் எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வரும் ? மருத்துவ காப்பீட்டின் பயன்கள் எங்கே போனது ? வரி செலுத்துவதால் ஒரு இந்திய குடிமகனாக எனக்கு என்ன பயண் ? என்னுடைய வரி பணமெல்லாம் எங்கே போனது ? இதற்கு யார் சரியான பதிலை சொல்லுவார்கள் ? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்

Advertisement