திருநங்கை மேக்கப் ஆர்டிஸ்டுக்கு முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகையின் மகன். ஆதாரத்துடன் இதோ.

0
2421
Seema
- Advertisement -

மலையாள சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகை மாலா பார்வதி. மலையாளத்தில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும், திருநங்கையில் இருந்து பெண்ணாக மாறியவருமான சீமா வினீத் இடம் பாலியல் துன்புறுத்தல் செய்யததாக மாலா பார்வதியின் மகன் அனந்த கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்த தகவல் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மேக்கப் ஆர்டிஸ்ட் சீமா வினித் கூறி இருப்பது, நான் என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் படிக்காத சில மெசேஜ்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பிரபல நடிகையின் மகன் அனந்த கிருஷ்ணன் என் பேஸ்புக் பக்கத்தில் பாலியல் தொடர்பாக வெளிப்படையான நிர்வாண புகைப்படங்களையும், குறுந்செய்திகளையும் பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

നിങ്ങൾ വളർന്നു sree മാലാ പാർവതി പക്ഷേ നിങ്ങൾ നിങ്ങളുടെ മകനെ നന്നായി വളർത്താൻ മറന്നു പോയിരിക്കുന്നു………

Seema Vineeth ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಜೂನ್ 10, 2020

இந்த செய்தி பெண்களின் சுதந்திரத்துக்காகவும், திரை உலகில் ஆண்களின் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஒரு நபரின் மகனிடமிருந்து வந்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின் நான் இந்த சம்பவம் குறித்து பார்வதி இடம் சொன்னேன். அவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் அவர் மகன் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். இது மன்னிப்பு கேட்பதன் மூலம் தீர்க்கப்பட வேண்டிய விஷயமில்லை.

- Advertisement -

இது போன்று சமூக வலைத்தளங்கள் மூலம் பல பேருக்கு வெளிப்படையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுகிறார்கள். அனந்தகிருஷ்ணன் என்னை மட்டும் இல்லை என்னுடைய பால் இனத்தையும் அவமானப்படுத்தினார். உங்கள் மகன் செய்த தவறை நான் மறைத்தால் என்னுடைய சுய மரியாதையும் இழந்தது போல் இருக்கும். அதனால் தான் நான் இந்த பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார். அதோடு இதுகுறித்து நடிகை மாலா பார்வதி யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னிடம் கூறி இருந்தார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை பார்த்த நடிகை மாலா பார்வதி அவர்கள் கூறியிருப்பது, ஒரு தாய் மற்றும் ஒரு பெண்ணாக இதை பார்த்தவுடன் நான் அவரிடம் மன்னிப்பு தெரிவித்தேன். அது மட்டும் இல்லாம நான் அவளை சட்டபூர்வமாக முடிவு எடுக்கும்படி கேட்டேன். அவர் என்னிடம் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் இந்த விவகாரம் முடியாது என்று கூறி இருந்தார். உடனே சீமா வினீத் கூறி இருப்பது, நான் எந்த ஒரு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. நான் பணம் கேட்டதாக சொன்னதற்கு ஆதாரம் கொண்டு வரட்டும் என்று கூறினார்.தற்போது இந்த சம்பவம் மலையாள திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement