கண்ட இடத்தில் வளையத்தை குத்திய ரைசா – கண்ட மேனிக்கு கலாய்க்கும் மீம் கிரியேட்டர்கள். ரைசாவின் ரியாக்ஷன்.

0
6337
Raiza
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ரைசா வில்சன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் நடிகையாக ரைசா வில்சன் அறிமுகமான முதல் படமாம். 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகை ரைசா வில்சனும் ஒரு போட்டியாளராக இருந்தார்.

-விளம்பரம்-

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகை ரைசா வில்சனிற்கு அடித்தது லக். ஆம்.. ஹீரோயினாக நடிக்க ரைசா வில்சனிற்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்தது. அந்த படம் தான் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இப்புகைப்படத்தில் ரைசா வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

-விளம்பரம்-

தனது ரியல் புகைப்படத்தை ஃபில்டர் பயன்படுத்தி நெற்றி, மூக்கு மற்றும் உதட்டில் வளையம் போட்டது போன்று எடிட் செய்திருக்கிறார் ரைசா. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பலர் பல விதமான கமென்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர். அதற்கு ரைசாவும் ஜாலியாக பதில் சொல்லி வருகிறார். அதில் குறிப்பாக ஒரு ரசிகர், “இப்போது பரவி வரும் ‘கொரோனா’ வைரஸிற்கு முகம் ஒன்று இருந்தால், இப்படித்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Advertisement