ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரைசா.

0
35558
raiza
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை மூன்று சீசன்கள் கடந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தது என்னவோ பிக் பாஸ்ஸின் முதல் சீசன் தான். பிக் பாஸ்ஸின் முதல் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.மேலும் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : 3 மடங்கு சம்பளம் தருகிறேன் என்று படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது இளம் நடிகை புகார்.

- Advertisement -

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் ஜி வி பிரகாஷுடன் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ரைசா. அது போக ரைசா, ஆலிஸ் என்ற படத்தில் நடிகை ரைசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகளே இல்லை. மேலும், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூட அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன். மேலும், இது தமிழ்நாடு மக்களுக்கான என்னுடைய பதிவு என்று வெளிப்படையாகபோட்டிருந்தார். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் லைவ் சாட்டிங்கில் வந்த ரைசாவிடம், ஹரீஷ் அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரைசா, “ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

இதையும் பாருங்க : டேய் போதையில் இருக்கியா? புதிய படம் குறித்து ட்வீட் செய்து பின் டெலீட் செய்த அட்லீ. இதான் அந்த ட்வீட்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு நடிகை ரைசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஜி வி பிரகாஷ், விஷ்ணு விஷால் போன்றவர்களின் புகைபடங்களை பதிவிட்டு, சில ஹாட்டான கேப்ஷன்களை செய்திருந்தார். பின்னர் ரசிகர்கள் பலரும் உங்கள் அக்கௌன்ட்டை யாரவது ஹேக் செய்து இப்படி செய்தார்களா என்று கேட்டதற்கு, இல்லை நானே தான் இப்படி பதிவிட்டேன் என்று கூறி இருந்தார் ரைசா.

Advertisement