டேய் போதையில் இருக்கியா? புதிய படம் குறித்து ட்வீட் செய்து பின் டெலீட் செய்த அட்லீ. இதான் அந்த ட்வீட்.

0
32152
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக ஆனார் அட்லீ. இயக்குனர் அட்லி தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அட்லீ அவர்கள் கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியிருந்தார். உலக அளவில் பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது. விஜய்யின் பிகில் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லி அவர்கள் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இயக்குனர் அட்லி அடுத்ததாக இயக்கும் படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ அவர்கள் அந்தகாரம் என்ற படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில் கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மிஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதையும் பாருங்க : பாய்ஸ் படத்திற்கு முன்பாகவே மாதவனின் இந்த படத்தில் பஸ் பயணியாக முகம் காட்டியுள்ள சித்தார்த்.

- Advertisement -

இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்து உள்ளார். மேலும், இந்த படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதேபோல் இந்த அந்தகாரம் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரில் 14 ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று வெளியாகி இருந்தது. மேலும், இந்த அந்தகாரம் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றது.

ஆனால், இந்த படத்தின் ட்ரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லீ பகிர்ந்த போது பல்வேறு நடிகர் நடிகைகளும் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். அவர்கள் அனைவருக்கும் தனித்த தனியாக நன்றி தெரிவித்தார் அட்லீ, ஆனால், ஆர்வக் கோளாறில் தன்னுடைய டீவீட்டிற்கும் நன்றி என்று கமன்ட் செய்துவிட்டார் அட்லீ.

இதையும் பாருங்க : பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது’ டிடியின் புத்தாண்டு புகைப்படம். அட்வைஸ் செய்த ரசிகர்கள்.

-விளம்பரம்-

பின்னர் அந்த டீவீட்டை கவனித்து சுதாரித்து கொண்ட அட்லீ அந்த டீவீட்டை சிறிது நேரத்திலேயே டெலீட் செய்துவிட்டார். இருப்பினும் அந்த டீவீட்டை பல லட்சம் பேர் பார்த்து விட்டனர். இதனால் பலரும் அட்லீயை கிண்டலத்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் என்ன போதையில் இருக்கிறீர்களா? உனக்கு நீயே கமன்ட் பண்ணிப்பீயா என்றெல்லாம் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement