ஹரிஷ் கல்யானை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் பிரபலத்தை சந்திக்க விரும்பிய ரைசா. வீடியோ இதோ.

0
12109
raiza
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரைசா. நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர். அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார்.

-விளம்பரம்-

2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தமிழ் பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன். மேலும், அதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர்கள் இருவருக்கும் கிசுகிசு உள்ளது என பல தகவல்கள் இணையங்களில் வந்தது.

இதையும் பாருங்க : நீங்கள் சிங்களா? கமிடடா? சிறுமி என்றும் பாராமல் பேபி சாராவை கேட்ட நபர். இருக்கும் அவர் சொன்ன பதிலை பாருங்க.

- Advertisement -

ஆனால், இவர்கள் இருவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்களாக தான் பழகி வருகின்றோம் என்று கூறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் நடிகை ரைசா லைவ் சாட்டில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் முகென் குறித்து உங்கள் கருத்தென்ன என்பதை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ரைசா, அவர் மிகவும் குயூடாக இருக்கிறார். நன்றாக பேசுகிறார். எனக்கு அவரை பிடித்திருக்கிறது. அவரை நான் நேரில் சந்திக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை ரைசா, நான் ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement