ரன்பீர் கபூருக்கு தமிழ் வட்டார மொழியை கற்றுக்கொடுத்த ராஜு – திட்டி தீர்த்த ரசிகர்களால் மன்னிப்பு கேட்டு ராஜு பதிவு.

0
393
raju
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜூ நடித்திருந்தார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு கலந்து கொண்டு திறமையாக விளையாடி முதல்பரிசை தட்டி சென்றார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ன இவர் விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அந்த வகையில் இவரை வைத்து பிரத்தியேகமாக விஜய் தொலைக்காட்சியில் பார்ட்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் வாராவாரம் பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஜாலியான கேள்விகளை கேட்டும், ஜாலியான சில டாஸ்க்குகளை கொடுத்தும் வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ராஜூவும் வந்திருந்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன் பீர் கபூர், தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா ஆகிய மூவரும் பிரம்மாஸ்திரா படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆங்கர் செய்த ராஜு ரன்பீர் கபூருக்கு சில தமிழ் வட்டார மொழிகளை சொல்லிக் கொடுத்திருந்தார். அப்போது இவர் ஒவ்வொரு ஊரின் பாஷையும் எப்படி பேச வேண்டும் என்று முக பாவனை உடன் ரன்பீருக்கு சொல்லிக் கொடுத்தார்.

-விளம்பரம்-

அப்போது சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என்று அனைத்திற்குமே ஒரு ஸ்லாங் இருக்கிறது. சென்னை என்பது ஹாட் ப்ளேஸ் இங்கே இருப்பவர்கள் எப்போதும் எரிச்சலாக தான் இருப்பார்கள். அதனால் நீங்களும் முகத்தை எரிச்சல் அடைவது போல வைத்துக்கொண்டு ‘எப்படி கீர’ என்று சொல்லுங்கள் என்று ரன்பீருக்கு கற்றுக்கொடுக்க அவரும் அதை அப்படியே செய்தார். அதே போல மதுரையில் இருப்பவர்கள் எப்போதும் போதையில் இருப்பது போல பேசுவார்கள் என்றும் ராஜு சொல்லிக்கொடுத்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வயர்லாக பரவி வருகிறது.

மேலும் சென்னையில் பிழைப்புத் தேடி வந்துவிட்டு எப்படி சென்னையை படித்து பேசலாமா என்று ராஜுவிற்கு கண்டனங்கள் குவிந்தது எப்படி ஒரு நிலையில் தன்னுடைய தவறை உணர்ந்த ராஜூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்குடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சணம் எழுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்க்காக வருந்துகிறேன்… இரிடேட் ஆகவேண்டாம், மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement