என் அனுபவத்தில் இப்படி யாரும் காரணத்தை சொல்லி பார்த்தது இல்லை – ராஜுவை வறுத்தெடுத்த ஜேம்ஸ் வசந்தன்

0
612
james
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாட்கள் செல்ல செல்ல மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரமாக போட்டியாளர்களுக்கு சண்டை சச்சரவுகள் எழத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பிரியங்கா மற்றும் ஆகிய இருவருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜு வளக்க வேண்டிய பாத்திரத்தை தாமரை வளக்கி கொண்டிருந்தார். இதைப் பார்த்த பிரியங்கா இந்த வீட்டில் தாமரை மட்டும்தான் வேலை செய்ய வேண்டுமா கொதித்துப் போனார்.

-விளம்பரம்-

ஆனால் தாமரைச்செல்வி பாத்திரம் வளக்கியது பிரச்சனை இல்லை, ராஜு வளக்கவேண்டிய பாத்திரத்தை வழங்கியது தான் பிரியங்காவிற்கு இந்த கோபத்தை ஏற்படுத்தியதாக தாமரைச்செல்வியே கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். அப்போது பேசிய ராஜு எனக்கு பாத்திரம் விளக்குவது சுத்தமாக பிடிக்காது நான் மிகவும் உயரமாக இருப்பதால் எனக்கு அது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் ‘இவரை விட உயரமான நிரூப் வளக்கவில்லையா? இவரை விட உயரமான ஆட்கள் வீட்டு வேலை எல்லாம் செய்ய வில்லையா ? ஆனால், உயரத்தை ஒரு காரணமாக சொன்னதை எல்லாம் நான் பார்த்ததே இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

இதையெல்லாம்விட என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது என்னவென்றால் ராஜு அப்படி சொன்னதற்கு மக்கள் கைதட்டியது தான். அங்கு தான் ராஜு ஜெயிக்கிறார். என்ன செய்வது இந்த சமூகம் இப்படித்தான் இருக்கப் போகிறது என்றால் யாராலும் அதை மாற்ற முடியாது’ என்று கூறியிருக்கிறார். ராஜுவை பற்றி ஜேம்ஸ் வசந்தன் இப்படி கூறுவது முதல் முறை அல்ல, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போட்டியாளர்களுக்கு truth or dare என்ற விளையாட்டு டாஸ்க்காக கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

மிகவும் ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்த இந்த டாஸ்கில், ராஜு பாட்டிலை சுற்றிய போது அபிநய்யிடம் ‘பாவனியை லவ் பண்றீங்களா’ என்று கேட்டது பலரை ஷாக்கில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன் ‘பாவனி கைம்பெண் அவரை எப்படி ராஜு இப்படி சொல்லலாம், இப்படி அருவருப்பான விஷயத்தை செய்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் சிறுமைபட்டு விடுவோம் என்று தான் ராஜு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அதில் பாவனி இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்பதால் ராஜுவால் மன்னிப்பு கேட்க முடிவவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement