தன் குருநாதர் பாக்கியராஜுடன் ராஜு எடுத்த முதல் புகைப்படம் – மொட்டை தலையுடன் எப்படி இருக்கார் பாருங்க.

0
536
raju
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 பேர் வெளியேறி இன்னும் 18 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Raju Jeyamohan (Bigg Boss Tamil 5) Wiki, Biography, Age, Serials, Images -  Tech Kashif

பிக் பாஸ் என்றாலே அதில் விஜய் டிவி பிரபலங்கள் கண்டிப்பாக இருந்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் ப்ரியங்கா, ராஜு ஆகிய இருவரும் விஜய் டிவி பிரபலங்கள் தான். இதில் பிரியங்காவை பற்றி அனைவருக்கும் தெரியும். நடிகர் ராஜூ ஜெயமோகன் அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார்.

- Advertisement -

சீரியல் டு சினிமா :

இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் ரோலில் நடித்த கவினுக்கு நண்பராக நடித்திருந்தார்.

கவினின் நட்பு :

இதனை தொடர்ந்து இவர் ஆண்டாள் அழகர்,பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து இருந்தார். பிறகு இவர் சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான முகமாக தோன்றினார். அதற்கு பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார்.

-விளம்பரம்-

ராஜுவின் மனைவி :

மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரை பதித்த பின்பு தான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 12 வருடங்களுக்கு மேலாக தாரிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின் இவர்கள் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

Natupuna Ennanu Theriyuma actor Raju Jeyamohan enters wedlock | Tamil Movie  News - Times of India

வாய்ப்பிற்காக காத்திருக்கும் ராஜு :

கடந்த வாரம் பிக் பாஸ் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு விசிட் அடித்தனர். அப்போது ராஜுவை பார்க்க அவரது மனைவியும், அம்மாவும் வந்திருந்தனர். அப்போது கூட ராஜு தன் மனைவியிடம் ‘வெளியில் வந்து வாய்ப்புக்கு அலையா வேண்டியது இல்ல இல்ல’ என்று கேட்டது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இந்த சீசனில் ராஜு தான் வெற்றி பெறுவார் என்று பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement