சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.
வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். மேலும், ஆரம்பத்திலேயே இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி இருந்தார்கள். அதிலும் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே திருநங்கை நமிதா மாரிமுத்துக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள்.
ஆரம்பத்திலேயே வெற்றியாளர் என்று நிரூபித்த ராஜு :
ஆனால், இந்த சீசன் ஆரம்பித்த சில நாட்களிலேயே அவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நிகழ்ச்சியை விட்டு ஓரிரு நாட்களிலேயே வெளியேறிவிட்டார் என்று கூறப்பட்டது. மேலும், பிக் பாஸ் வீட்டில் அவருக்கும் தாமரைக்கும் பிரச்சனை ஏற்பட்டு இதனால் நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்த பொருட்களை சேதம் செய்துவிட்டதாக அவர் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
நமிதாவின் சர்ச்சை வெளியேற்றம் :
ஆனால், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நமிதா, தனக்கு உடல் நிலை சரி இல்லாததால் வெளியேறியதாக அறிவித்தார். அதே போல நமீதா இறுதி போட்டிக்கு கூட வரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டிகள், சவால்கள் நடைபெற்று வந்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ஆனந்தம், சந்தோஷம், கும்மாளம் என்று இருந்தாலும் போகப்போக போட்டி சச்சரவு சலசலப்பு என்று ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் இந்த முறை முக தெரியாத நபர்கள் பலபேர் இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்தது.
டாப் 5 போட்டியாளர்கள் :
அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள்.
ராஜுவின் முதல் பதிவு :
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராஜு முதல் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் தான் கோப்பையை வென்ற தருணத்தின் புகைப்படங்களை பதிவிட்டு ’நன்றிகள்’ என ஒற்றை வார்த்தை டுவிட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. இந்த டீவீட்டில் ராஜுவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.