தளபதி 67 படத்தில் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் – அதில் ஒருத்தர் டைட்டில் வின்னர். இன்னோருத்தர் சீசன் 6 போட்டியாளர்.

0
205
- Advertisement -

தளபதி 67 படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாரிசு படம்:

மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.

raju

தளபதி 67 படம்:

இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வாரிசு படத்தின் சில எக்ஸ்குளுசீவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இதனை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 என்ற படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் வில்லனாக சஞ்சய் தத் கமிட்டாகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், கௌதம் மேனன் உட்பட பலரும் நடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் தளபதி 67 படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானவர் ராஜு.

myna

படத்தில் இணைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்:

அதேபோல் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டிருப்பவர் மைனா நந்தினி. இவர்கள் இருவருமே தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ராஜு மற்றும் நந்தினி. அதற்கு பின்பு சில படங்களில் ராஜூ நடித்திருந்தார். மைனா நந்தினியும் வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதோடு ராஜூ விஜயின் தீவிர ரசிகர் என்பது எல்லோரும் அறிந்ததே. தற்போது தளபதி 67 படத்தில் விஜய் உடன் ராஜு மற்றும் மைனா நந்தினி நடிக்க இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement