இப்படி இருக்கயே உனக்கு வெக்கமா இல்லயா – ராஜூவை வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான்.

0
429
raju
- Advertisement -

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவை கண்டமேனிக்கு மன்சூர் அலிகான் திட்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் படத்தில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மன்சூர் அலிகான் நடிக்கும் படம்:

இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை ராபின்சன் தயாரித்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் மன்சூர் அலிகான் குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார். அதோடு அவர் இயக்கத்தில் மன்சூர் அலிகானை நடிக்க வைப்பதாக கூறி இருந்தார். மேலும், சமீப காலமாக மன்சூர் அலிகான் பேட்டிகளில் மாஸ் செய்து வருகிறார்.

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி:

இந்நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவை கண்டமேனிக்கு மன்சூர் அலிகான் திட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் டைட்டில் வின்னரும், நடிகருமான ராஜு தான் தொகுத்து வழங்கி வருகிறார். ராஜுவுடன் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, மதுரை முத்து, ராமர் போன்ற பலரும் கலந்து கொண்டு ஃபன் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான்:

வாராவாரம் இந்த நிகழ்ச்சிக்கு விஜய் டிவி பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் அழைத்து வந்து என்டர்டைன்மென்ட் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டிருக்கின்றார். நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான், பிரியங்கா உடன் சேர்ந்து நடனம் ஆடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ராமர், மன்சூர் அலிகான் போலவே உடை அணிந்து அவரை கலாய்த்து இருக்கிறார். இருந்தாலும் மன்சூர் அலிகான் ராமரை படுத்தி எடுத்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் வழக்கம்போல தனக்கே உரிய நக்கல் குணத்தோடு எகத்தாளமான பேச்சை பேசி இருக்கிறார்.

ராஜூவை வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான்:

அது மட்டும் இல்லாமல் வெட்கமா இல்லையா? அழகா தானே உங்க அம்மா, அப்பா உன்ன பெத்திருக்காங்க. போய் நடிக்கிற வேலையை பார்க்காமல் இப்படி ராஜு வூட்டுல பார்ட்டின்னு விஜய் டிவியை சுத்திக்கொண்டே வருகிறாய்? சோறு கண்ட இடம் சொர்க்கமா? என்று கண்டமேனிக்கெல்லாம் ராஜுவை மன்சூர் அலிகான் திட்டி இருக்கிறார். உடனே ராஜு பயந்து கொண்டே போயிருந்தேன் சார் என்றெல்லாம் கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி ராஜு மீண்டும் விஜய்டிவிக்கே தொகுப்பாளராக வந்தது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement