கப்பு முக்கியம் ராஜு – ஸ்பெஷல் நாளில் ராஜுவுக்கு வாழ்த்து சொன்ன பிரபல தயாரிப்பாளர்.

0
398
raju
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்திருக்கிறது 18 போட்டிகளில் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை நமீதா, நாடியா, சின்ன பொண்ணு, அபிஷேக் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் விஜய் டிவி பிரபலங்கள் களமிறங்கி இருகின்றனர். அதில் ராஜு மற்றும் பிரியாங்காவும் ஒருவர் தான். இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக ராஜுவிற்கு முதல் நாளில் இருந்தே பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் ரோலில் நடித்த கவினுக்கு நண்பராக நடித்திருந்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் ஆண்டாள் அழகர்,பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து இருந்தார். பிறகு இவர் சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான முகமாக தோன்றினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அசத்தி வருகிறார். ராஜு கடந்த ஆண்டு ஆண்டு ஆக்டொபர் மாதம் தான் தாரிகா என்பருடன் திருமணம் ஆனது. இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான்.


-விளம்பரம்-

திருமணம் ஆகி ஓராண்டை நிறைவு செய்துள்ள ராஜா தல தீபாவளியை கூட மனைவியுடன் கொண்டாட முடியாமல் போய்யுள்ளது. அதே போல இன்று அவரின் முதல் திருமண நாளை கூட அவர் மனைவியுடன் கொண்டாட முடியாமல் போய்யுள்ளது வருத்தமே. இப்படி ஒரு நிலையில் ராஜு, கவினுடன் இணைந்து நடித்த நட்புன்னா என்ன தெரியுமா தயாரிப்பாளர் ரவீந்தர், ராஜுவிற்கு திருமண நாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement