ஒட்டுமொத்த மக்களும் பல மாதங்களாக ஆவலுடன் எதிர் நோக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் பிக் பாஸில் இருந்து வெளியேறிய நிலையில் நாடியா மற்றும் அபிஷேக் அடுத்தடுத்து வாரங்களில் வெளியினர். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் கண்டிப்பாக இடம்பெற்று விடுவார்கள்.
அந்த வகையில் இந்த சீசனில் ராஜு மற்றும் பிரியங்கா இருவருமே விஜய் டிவி ப்ராடக்ட் தான். இதில் இருவருக்குமே ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதில் ராஜுவிற்கு பிக் பாஸுக்கு பின்னர் பல ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் வீட்டில் இவர் செய்து வரும் காமெடிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறறது. அதே போல இவர் கேமையும் நேர்மையாக தான் விளையாடி வருகிறார்.
இதையும் பாருங்க : ஜெயஸ்ரீ உயிருக்கு ஆபத்து வந்தா நான் பொறுப்பில்ல – தயாரிப்பாளர் மகனுடன் இருந்த உறவு – போலீசில் புகார் அளித்த சீரியல் நடிகர் ஈஸ்வர்
ஆனால், கடந்த இரண்டு தினங்களாக ராஜுவின் பேச்சு சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறி இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சில் சுருதியின் ஆடை குறித்து பேசிய ராஜு ‘ஸ்ருதியின் ஆடை நன்றாக தான் இருக்கிறது பார்க்க சில்க் சுமிதா மாதிரி தான் இருக்குறீங்க’ என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சில்க் சுமிதாவை கவர்ச்சியின் அடையாளமாக சொல்ல வேண்டாம் என்று பலர் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சினிமா துறையில் இருக்கும் பலர் சில்க் சுமிதாவை ஒரு நல்ல மனிதர் மற்றும் சிறந்த நடிகை என்று தான் கூறி இருக்கின்றனர். ஆனால், வெறும் ஆடை பற்றி பேசிய போது ராஜு, சில்க் சுமிதாவை ஒப்பிட்டு பேசியது சரியல்ல என்று கூறி வருகின்றனர். அதே போல கடந்த இரன்டு தினங்களுக்கு முன் தாமரை காயினை சுருதி எடுத்த போது ஒரு பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது பாவனியிடம் ராஜு பேசிய போது ”நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா” என்று பேசியது கூட சமூக வலைதளத்தில் மிகவும் விவாதமாக மாறியது. இதுவரை ராஜுவை கமல்ஹாசன் உட்பட சக போட்டியாளர்கள் ரசிகர்கள் என்று அனைவரும் பாராட்டி வரும் நிலையில் திடீரென அவருக்கு எதிராக இந்த விவகாரம் திரும்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.