விஜய் சார்கிட்ட நான் அந்த ஸ்டிக்கர் நோட்ட காட்டியதும் – பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சந்தித்துள்ள ராஜு.

0
320
raju
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் சினிமாவில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார். பின் பல போராட்டங்களுக்கு பிறகு ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், ராஜு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி வந்தார்.

- Advertisement -

விஜய்யை சந்தித்துள்ள ராஜு :

இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜுவுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இந்நிலையில் ராஜி உடைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் தளபதி விஜய்யை பிக் பாஸ் நிகழ்ச்சி போவதற்கு முன்பே பீஸ்ட் பட சூட்டிங்கிலேயே பார்த்தேன்.

இங்கே வா, புதுசா, யார் நீ?

எல்லோரும் தளபதியை எதிர்பார்த்து நின்று கொண்டு இருந்தோம். அப்போது என் பக்கத்தில் ஒருவர் கிராஸ் பண்ணி போனார். திரும்பி பார்த்தால் தளபதி. எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. கை கால் எல்லாம் ஒரே பதட்டமாக இருந்தது. பொதுவாகவே விஜய் தளபதி அவர்கள் செட்டில் யார் புதிதாக? இருந்தாலும் கண்டுபிடித்தவர். அப்படித்தான் அவர் என்னை பார்த்துவிட்டு இங்கே வா, புதுசா, யார் நீ? என்று கேட்டார். உடனே நான் நெல்சன் டீமில் இருக்கிறேன் என்று சொன்னவுடன் அப்படியே என்ன பண்ணுகிறாய்.

-விளம்பரம்-

உன் கண்ணு ரொம்ப பயங்கரமாக இருக்கு :

உன் கண்ணு ரொம்ப பயங்கரமாக இருக்கு என ரொம்ப கேஷுவலாக பேசினார். அவர் பேசுவதை கேட்டு தலைவா பேசிட்டாரு. இது எனக்கு போதும்டா என்று மனசுக்குள் ரெக்க கட்டி பறந்த மாதிரி இருந்தது. அப்போ தளபதி பார்க்கும் போது நான் அவரைப் பற்றி சின்ன வயதிலிருந்து சேர்த்து வைத்த ஸ்டிக்கர் நோட்டை அவரிடம் காட்டினேன். அவர் ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து நைஸ் என்று என்னை பாராட்டி பிரியமுடன் விஜய் என்று ஆட்டோகிராஃப் போட்டுத் தந்தார்.

சஞ்சீவ் சொன்ன விஷயம் :

அதே மாதிரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ் அண்ணா வந்திருக்கும் போது கூட உன்னைப் பற்றி விஜய் சொன்னான். அந்த பையன தெரியும்டா, ராஜு நெல்சன் டீமில் இருந்த பையன். பிக்பாஸ் வீட்ல விளையாடிட்டு இருக்கான் என்று சொன்னாரு. அவ்வளவு ஞாபகமாக என்னை வைத்து தளபதி சொல்லி இருந்தார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது என்று கூறி இருக்கிறார். அதே போல் சில தினங்களுக்கு முன்பு ராஜு அவர்கள் தளபதி விஜய்யின் நண்பன் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை இழந்தது குறித்து பேசி இருந்தார்.

Advertisement