பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் தற்போது சவுண்டு பார்ட்டி என்றால் அது நிச்சயம் தாமரை செல்வியாக தான் இருக்கும். இதுவரை தாமாரை செல்வி பிக் பாஸ் வீட்டில் சண்டை இழுக்காதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கடந்த சில வாரமாகவே பிரியங்கா மற்றும் தாமரை செல்விக்கு தான் பிரச்சனை சென்றது.
https://twitter.com/gurunathaa4/status/1475879370996654081
டிக்கெட் டு பினாலே டாஸ்க் :
இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற டிக்கெட் டு பின்னாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த டாஸ்கில் முதல் டாஸ்க்கிலேயே நிரூப்பை பேசி வெளியே அனுப்பி வைத்துவிட்டனர். அதிலும் பிரியங்கா தான் நிரூப் பெயரை முதலில் சொன்னார்.
பிரியங்கா தாமரை மோதல் :
இதை தொடர்ந்து 7 பேர் இந்த டாஸ்கை தொடர்ந்து வந்தனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாவனி மற்றும் தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார். அதிலும் அன்றைய டாஸ்கில் பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் நடுவே மிகப்பெரிய சண்டையே வெடித்தது. இந்த டாஸ்க் ஆரம்பித்த முதலே தாமரையை தொடர்ந்து சீண்டிவிட்டு கொண்டே இருந்தார் பிரியங்கா.
https://twitter.com/hemakaroonya1/status/1476091486160576512
மோதிக்கொண்ட தாமரை - பிரியங்கா :
அதிலும் தாமரையை 'த்து' என்று பிரியங்கா சொல்ல தாமரை செல்வியும் பதிலுக்கு பிரியங்காவை கண்ட மேனிக்கு திட்டினார். ஒரு கட்டத்தில் தாமரை, பிரியங்காவின் முட்டையை உடைக்க சென்ற போது பிரியங்கா, தாமரையை நீக்கி தள்ளி கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான தாமரை, பிரியங்காவை மிகவும் வேகமாக தள்ளிவிட்டார். தாமரையின் இந்த தாக்குதலை சற்றும் எதிர் பாராத பிரியங்கா, பிக் பாஸிடம் இதை முறையிட்டார்.
ராஜுவிடம் புலம்பிய தாமரை :
அதே போல தாமரை ஒரு முறை தன்னை ஓங்கி தள்ளியதற்கு தாமரையை 'இப்போ நீ என்ன பண்ண, என்ன பண்ண' என்று பல முறை தள்ளிவிட்டார் தாமரை. இந்த விவகாரத்தில் தாமரைக்கு ஆதரவாக சிலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக சிலரும் பதிவிட்டு வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ராஜுவிடம், தான் இங்கே அனாதை போல இருப்பதாக தாமரை புலம்பி கொண்டு இருந்தார்.
https://twitter.com/itsmeaziz07/status/1476395939946393606
பிரியங்காவிடம் போட்டு கொடுத்த ராஜு :
அப்போது ராஜு, இப்படி எல்லாம் பேசாதே என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தாமரை புலம்பியதை அப்படியே பிரியங்காவிடம் போய் சொல்லியுள்ளார் ராஜு. எல்லா முறையும் அவள் ஜெயிக்க முடியாது இதை போய் அவரிடம் சொல் எத்தனையோ முறை அவர் ஜெயிக்க வேண்டும் என்று நான் சில விஷயங்களை செய்து இருக்கிறோம் ஆனால் அப்போதெல்லாம் இந்த மாதிரி வார்த்தைகளை அவர் பயன்படுத்த தெரியவில்லையா என்று கூறியுள்ளார்.





