சிறப்பாக ஆட துவங்கி நேரத்தில் வெளியேறிய ராம், பிக் பாசில் சம்பாதித்த மொத்த பணம் எவ்ளோ தெரியுமா ?

0
401
ram
- Advertisement -

இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் (நேற்று )சனிக்கிழமையே ராம் வெளியேறிஇருந்த நிலையில் தற்போது அவரின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 62 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

தப்பித்த மணிகண்டன் :

இந்த நிலையில் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று கடந்த வாரமே அறிவித்து இருந்தார் கமல். இந்த நிலையில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன், சிவின், தனலட்சுமி ஆகியோருக்கு இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டு இருந்தது. இதில் மணிகண்டன் வெற்றி பெற்று இந்த வார தலைவராகி விட்டார் இதனால் அவர் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

அதேபோல கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் வெற்றி பெற்று தனலட்சுமி நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் சென்று விட்டார் அதனால் அவரும் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பெரும்பாலானோர் ஆயிஷாவின் பெயரை தான் கூறியிருந்தார்கள். அவரை தொடர்ந்து ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்தனர்.

-விளம்பரம்-

சனிக்கிழமையே வெளியேறிய ராம் :

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் கண்டிப்பாக இந்த லிஸ்டில் இருந்து ராம் வெளியேறுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. . ஏனெனில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ராம் பெரிதாக மக்களை கவரவில்லை. எனவே, அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறி இருக்கின்றனர். இதில் ராம் நேற்றே வெளியேறிவிட்டார்.

ராம் சம்பளம் :

இப்படி ஒரு நிலையால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராம் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ராமுக்கு 15,000 முதல் 20,000 வரை பிக் பாஸ் சம்பளம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 60 நாட்கள் பயணித்த ராமுக்கு குறைந்தபட்சம் 9 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சற்று மந்தமாக விளையாடினாலும் நாட்கள் செல்ல செல்ல ராம் கொஞ்சம் நன்றாக தான் விளையாடி வந்தார். அதிலும் இந்த வாரம் ரகுவரன் போல மிகவும் சிறப்பாகவே நடித்து அசத்தி இருந்தார்.

Advertisement