இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

0
760
Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே, நாளை (ஜூலை 22) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த வார வெளியேற்றப்படலத்தில் 5 போட்டியாளர்கள் உள்ளனர்.பொன்னம்பலம், பாலாஜி,ஜனனி, ராமயா,ஐஸ்வர்யா.இதில் பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி மூவரும் மக்களால் பிக் பாஸ் வீட்டில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.மீதம் இருப்பது ராமயா மற்றும் ஐஸ்வர்யா தான்.

Ponnambalam-In-The-Bigg-Boss-House

இந்த இருவரில் மக்கள் கருத்துப்படி இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று கருதப்பட்டு வந்தாலும், இந்த வாரம் ரம்யா தான் வெளியேற்றபடுவார் என்ற சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ரம்யா வெளியேற்றப்படுவதற்காகவே பிக் பாஸே இந்த வாரம் முழுக்க ரம்யா மீது தவறான அபிமானம் மக்கள் மத்தியில் வரவழைக்கவே பிக் பாஸ் சில சூட்சமத்தை கையாண்டார்.

அதனால் தான் இந்த வாரம் வெளியான ப்ரோமோ விடியோவிலும், நிகழ்ச்சியிலும் ரம்யாவையே குறிவைத்து காட்டுகின்றனர் என்பது நன்றாகவே தெரிந்தது. ஏற்கனவே கடந்த வாரம் யாஷிகா மற்றும் நித்யாவிற்கு எதிரான எலிமினேஷன் போட்டியில் யாஷிகா தான் வெளியேறுவார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நித்யாவால் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்து செல்லமுடியாது என்று எண்ணிய பிக் தந்திரமாக யாஷிகாவை பிக் பாஸ் வீட்டில் தக்கவைத்து கொண்டது.

அதே நிலைப்பாட்டை தான் ரம்யா விடயத்தில் கையாண்டு வருகின்றனர். ஐஸ்வர்யாவை விட ரம்யா அத்து மீறி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், ஐஸ்வர்யா இருந்தால் தான் நிகழ்ச்சியை சற்று சுவாரசியமாக நகர்த்தி விடலாம் என்று பிக் பாஸ் யூகித்து வருகிறது. அதனால் தான் அவருக்கு இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் பவரையும் அளித்துள்ளது. ரம்யா மீது மக்களுக்கு தவறான பிம்பம் எழவேண்டும் என்பதற்காகவே இந்த வாரம் முழுக்க ரம்யா கோவப்படும் காட்சிககளையும், பிறரை பற்றி குறை கூறும் காட்சிகளை தான் அதிகம் காண்பித்து வந்தனர்.

Mahat

ஆனால், பிக் பாஸ் வீட்டில் அத்துமீறி நடந்து வரும் ஐஸ்வர்யாவின் செயல்களை பிக் பாஸ் எபிசோடில் காண்பிக்க மறுக்கிறது. இந்த வாரம் மிட் நைட் மசாலாவில் வெளியான சில விடீயோக்களில் ஐஸ்வர்யா அத்து மீறி தான் நடந்து கொண்டிருந்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான மிட் நைட் மசாலா வீடியோவில் ஐஸ்வர்யா, எனக்கு ஒரு சுமோக்(cigarette) கொடு என்று கேட்டு ஸ்மோக்கிங் ரூமுக்குள் சென்றுவிடுவார்.அதுமட்டும் இன்றி சென்றாயனை தரக்குறைவாக பேசி இருப்பார்.யாஷிகா எங்கே ..சென்ராயன் எங்கே என மோசமாக பேசியிருப்பார்.ஆனால், இவற்றை ஏன் தொலைகாட்சியில் காண்பிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

Aishwarya

இதையெல்லாம் காட்டினாள் ஐஸ்வர்யா மீது தவறான எண்ணம் எழுந்து அவர் வெளியேறிவிடுவார் என்று எண்ணியே இது போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவில்லையோ என்ற எண்ணமும் எழுகிறது. எனவே, தனது டிஆர்பிக்கு ஏற்றார் போல போட்டியாளர்களை பகடை காயாக தான் பிக் பாஸ் பயன்படுத்தி வருகிறார்.