இப்போ தெரியுது உன்ன ஏன் KPY-ல ஜட்ஜ்ஜா போட்டாங்கனு – ரம்யாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள். இதான் காரணம்.

0
2320
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் நடுநிலையாக தான் இருந்து வந்தார். மேலும், இவர் எந்த கேங்கையும் சேர்ந்தவர் இல்லை என்று பலரும் கூறி வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாகவே இவரது செல்வல்பாடுகள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆரி விஷயத்தில் மட்டும் இவர் பாரபட்சம் காட்டி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு ஆதாரமாக ஒரு குறும்படம் ஒன்றையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரமாக ஆரி டார்கெட் செய்யப்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதிலும் பாலாஜி மற்றும் சம்யுக்தா குழு ஆரிக்கு எதிராக தான் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ‘Nomination Topple card’ டாஸ்க்கில், ஆரி, சம்யுக்தாவை பற்றி பேசி இருந்தார். அப்போது சின்ன வயசா இருக்க ஆஜித்திற்கு அத்தனை மெச்சூரிட்டி தேவைப்படும் என்று நினைக்கும் நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாகி அவர்களின் மெச்சூரிட்டி அளவில் அப்படி இருக்கும்போது ஒரு கடமையை செய்ய தவறியதை சுட்டிக்காட்டிய பிறகு என்னை குறை சொல்லிவிட்டார் என்று கூறி இருந்தார் ஆரி.

இதை தொடர்ந்து கால் சென்டர் டாஸ்கில் சனம் ஷெட்டி, சம்யுக்தாவிற்கு கால் செய்த போது, நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறி இருந்தார். அதே போல மத்தவங்களுக்கு நான் கேப்டன் ஆனது அவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறிய சம்யுக்தா, அதற்கு என்ன காரணம் என்று சனம் கேட்டதற்கு அது அவங்களோட வளர்ப்பு என்று கூறி இருந்தார். இந்த டாஸ்க்கிற்கு பின்னர் சம்யுக்தாவிடம் ஆரி, ஏன் வளர்ப்பு பற்றி பேசுகிறார்கள் என்று கேட்டார்.

-விளம்பரம்-

அதற்கு சம்யுக்தா, நீங்கள் எப்படி என் தாய்மையை பற்றி பேசலாம், அதை நான் உங்களிடம் வந்து கேட்டேனா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விஷயத்தில் ரம்யா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆரி தாய்மையை பற்றி பேசியதை மட்டும் சுட்டிக்காட்டினார் ரம்யா. அதே போல கோர்ட் டாஸ்கின் போது சம்யுக்தாவை, ஆரி ‘தறுதலை’ என்று சுட்டி காட்டிவிட்டார் என்று சம்யுக்தா, ரம்யாவிடம் ‘வளர்ப்பு சரியில்லை’ என்று கூறி இருந்தார்.அப்போதும் ரம்யா எதுவும் சொல்ல வில்லை ஆனால், ஆரி எதாவது சொன்னால் மட்டும் ரம்யா வாய் திறக்கிறார் என்று நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement