கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் . அதில் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தான் ரம்யா, என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்தது.பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.இந்த நிலையில் பாடகி ரம்யா, கடந்த ஆண்டு விஜய் டிவி சீரியல் நடிகர் சத்யாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். மேலும், சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் குழந்தை கூட பிறந்து இருந்தது.
குழந்தை பிறந்த கையேடு சத்யா மற்றும் ரம்யா தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மற்ற தம்பதிகளுக்கு இணையாக இவர்களுக்கும் நல்ல வரவேற்பை பெற்றனர். ஆனால், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் எபிசோடுகளாக வரவில்லை. நேற்று நடந்த செமி பைனலில் கூட இவர்கள் பங்குபெறவில்லை.
இவர்கள் பங்குபெறாததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் ரம்யா இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில், நாங்கள் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறோம் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் இரண்டு சுற்றுகள் தான் தாக்குபிடிப்போம் என்று நம்பி இருந்தோம். ஆனால் உங்களின் அன்பிற்கு நன்றி எனக்கு லேசான வைரல் காய்ச்சல் இருந்தது அதனால்தான் என்னால் இந்த வாரம் கலந்து கொள்ள முடியவில்லை விரைவில் கடவுள் அருளால் மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறியிருக்கிறார்