சோமை ஏன் ரம்யாவின் தம்பு ‘மச்சான்’னு கூப்டாரு – கேள்வி எழுப்பிய முன்னாள் போட்டியாளர்.

0
2237

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் Freeze Task துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.இது நாள் வரை சண்டை சச்சரவு என்று போய்க்கொண்டு இருந்த பிக் பாஸ் வீட்டில் இந்த டாஸ்க்கிற்கு பின்னர் தான் கொஞ்சம் ஜாலியாகவும், எமோஷனலாகவும் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை ஷிவானி, பாலாஜி, சோம், ரம்யா பாண்டியன் ஆகியோர்களின் குடும்பத்தினர் உள்ளே சென்று வந்துவிட்டனர்.

இதையும் பாருங்க : கண் முன்னே மகள் வந்தும் Taskகை கடைபிடிக்கும் ஆரி – இப்போ புரியுதா இந்த மனுசனுக்கு ஏன் இவ்ளோ fansனு. Unseen Video இதோ.

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் ரம்யாவை சந்திக்க அவரது தாயும் சகோதரரும் வந்திருந்தார், அப்போது முதலில் பாலாஜியுடன் கையை குலுக்கி ஹாய் பிரதர் என்று சொன்ன ரம்யாவின் சகோதரர், பின்னர் சோம் சேகரை ஹாய் மச்சான் எப்படி இருக்க என்று கேட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘என்னடா நடக்குது’ என்ற மைண்ட் செட்டில் தான் ஷாக்காகினார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான டேனியல் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ‘எதுக்கு ரம்யாவின் தம்பி சோம் சேகரை மச்சான் என்று கூப்பிட்டார்’ என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக லவ் ஸ்டோரி என்பது இருக்கும். இந்த சீசனில் ஆரம்பத்தில் பாலா – கேபி லவ் கெமிஸ்ட்ரியை உருவாக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தது, அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை தொடர்ந்து ஷிவானி – பாலா காதல் கதை ஓடியது. ஆனால், பாலா தனக்கு காதல் எல்லாம் இல்லை என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். அதே போலத்தான் சோம் – ரம்யா இருவருக்கும் சாக்லேட் மேட்டர் முதலே ஒரு விதமான கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று பலரும் பிக் பாஸ் வீட்டில் கிளப்பிவிட்டு இருந்த நிலையில் தற்போது டேனியும் அதில் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement