எதுக்கு இந்த கேவலமான விளம்பரம் – விவேக் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த ரம்யாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள். இதான் காரணம்.

0
11915
ramya

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் நேற்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இதையும் பாருங்க : டி-ஷிர்ட்டுக்கு மேல் முண்டா பனியன், படு மாடர்ன் உடையில் திரௌபதி பட நடிகை.

- Advertisement -

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது இதற்கு பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். அதே போல நேரில் செல்ல முடியாத பல பிரபலங்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர். அந்த வகையில் விவேக் தன்னை பற்றி பெருமையாக பேசிய வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் பகிர்ந்து இருந்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் குறித்து பேசிய விவேக் ரம்யா பாண்டியனின் நடிப்பை பாராட்டியதோடு அவருக்கும் பலரும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரம்யா பாண்டியன் விவேக்கின் இறப்பிற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

-விளம்பரம்-

பலரும் விவேக் பற்றிய நல்ல விஷயங்களை பகிர்ந்து அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்த நிலையில் ரம்யா பாண்டியன், தன்னை பற்றி விவேக் பெருமையாக பேசியதை பகிர்ந்துள்ளது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. ரம்யா பாண்டியனின் இந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் சிலர்,

Advertisement