சூர்யா தயாரித்து இயக்கும் புதுப்படத்தில் சீமானை கிண்டல், கேலி செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் சூர்யா மீது கண்டனம் தெரிவித்து உள்ளனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
எளிய கிராமத்து மனிதர்களின் பின்னணியில் இன்றைய அரசியலை விமர்சிக்கும் வகையாக இந்த படம் உள்ளது. மேலும், இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சீமான் போல் தோற்றம் கொண்ட ஒருவர் கரும் பச்சை சட்டை அணிந்து பேட்டி அளிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
இதையும் பாருங்க : நடிகர் சரத்குமாரின் அக்காவை பார்த்துள்ளீர்களா – அவரே வெளியிட்ட புகைப்படம்.
அதுமட்டுமில்லாமல் சீமான் அடிக்கடி பேசும் வார்த்தைகளான இனமானம், தன்மானம், அம்பது வருஷமா தலையில மொளகா அரைச்சிட்டாங், வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை போன்ற பல வசனங்களை இந்த கதாபாத்திரம் பேசி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் அடிக்கடி மூக்கில் தடவுவது போன்ற மேனரிசத்தையும் இந்த கதாபாத்திரம் செய்துள்ளது. இதனை பார்த்து கொந்தளித்த நாம் தமிழர் கட்சியினர் நடிகர் சூர்யாவை தெலுங்கர் என விமர்சிக்க ஆரம்பித்தனர்.
எப்போதும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சூர்யா என் தம்பி. அவருக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் என்னை தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் என்று சூர்யாவுக்கு ஆறுதலாக பேசி வந்த கட்சியினரே தற்போது சூர்யாவுக்கு எதிராக கொந்தளித்து விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இந்த வாரம் சோசியல் மீடியாவே சூடு பிடிக்கும் அளவிற்கு சூர்யா, சீமானின் கருத்துக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.