ரம்யா – சோம் இருவரும் திருமணம் செஞ்சிகிட்டா ஓகேவா – ரம்யாவின் அக்கா சொன்ன அதிரடி பதில்

0
114428
ramya

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

Ramya Pandian: ரம்யா பாண்டியன் - சோம் ஜோடிக்கு இவ்ளோ வரவேற்பா..  நெட்டிசன்கள் என்ன செஞ்சிருக்காங்க பாருங்க - bigg boss impressed by ramya  som pair trend somya in twitter ...

இருப்பினும் இடையில் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார் இதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் இளசுகளின் ஆர்மி கூட உருவானது மேலும் இவர் வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக லவ் ஸ்டோரி என்பது இருக்கும். இந்த சீசனில் ஆரம்பத்தில் பாலா – கேபி லவ் கெமிஸ்ட்ரியை உருவாக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தது, அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை தொடர்ந்து ஷிவானி – பாலா காதல் கதை ஓடியது. ஆனால், பாலா தனக்கு காதல் எல்லாம் இல்லை என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால், இந்த சீசனில் பெரிதாக எந்த ஒரு லவ் டிராக்கும் எட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

வீடியோவில் 7 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், சமீபத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் பிக் பாஸ் வீட்டுக்கு என்று வந்த பின்னர் சோம் சேகருக்கும் ரம்யாவிற்கு முடிச்சி போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள். அதே போல சோம் – ரம்யா இருவருக்கும் சாக்லேட் மேட்டர் முதலே ஒரு விதமான கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று பலரும் பிக் பாஸ் வீட்டில் கிளப்பிவிட்டு இருந்தனர். அதே போல Freeze Task-ன் போது உள்ளே சென்ற ரம்யா பாண்டியனின் சகோதரர் சோம் சேகரை மச்சான் என்று கூப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியனிடம், ரம்யா மற்றும் சோம் இருவரும் திருமணம் செஞ்சிக்கிட்டா உங்களுக்கு ஓகேவா என்று கேட்கப்ட்டதற்கு, அது அவளுடைய விருப்பம் அவளுக்கு பிடிச்சா பன்னிகிட்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரம்யா பாண்டியனின் சகோதரர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்து சோம் சேகருடன் நேரத்தை கழித்து நன்றாக இருந்தது. தங்கமான மனுஷன் என்று கூறி இருந்தார் . இந்த பதிவிற்கு கீழ் சோம் சேகரின் ரசிகர் ஒருவர், அப்போது அவர்கள் இருவரும் ஒன்று சேருவதை நீங்கள் விருப்புகிறீர்களா என்று கேட்டதற்கு அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement