தனது அக்காவை கொச்சை படுத்திவரும் ஆரி ரசிகர்கள் – ஆரி குறித்து ரம்யா பாண்டியன் தம்பி போட்ட பதிவு.

0
61286
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.

-விளம்பரம்-

அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. இருப்பினும் இவரது ஒரு சில செயல்பாட்டினால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் சில ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் ஆரியை தொடர்ந்து டார்கெட் செய்து வருவதாக ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதிலும் கடந்த சில வாரங்களாகவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட ஆரி என்ன செய்கிறார் என்பதை தான் ரம்யா பாண்டியன் உன்னித்து கவனித்து வருகிறார்.

மேலும் ஆரியிடம் யாராவது சண்டை போட்டால் அவருக்கு ஆதரவாக ரம்யா பாண்டியன் களம் இறங்கி விடுகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட நாமினேஷன் முடிந்த பின்னர் ஆரி குறித்து ஆஜீத்துடன் மறைமுகமாக கேலி செய்து இருந்தார் ரம்யா பாண்டியன். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய அக்காவை திட்டி தீர்த்து வரும் 6in ரசிகர்களுக்கு ரம்யா பாண்டியனின் சகோதரர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார். அதில், ஒரு பெண் என்றும் பாராமல் கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஆரியே இதுபோன்ற விமர்சனங்களைப் பார்த்தால் தனது ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தப்படுவார்.

-விளம்பரம்-

ஆரியின் சமூக செயற்பாடுகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவருடைய ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு கேம் ஷோவாக பார்க்க வேண்டும். இந்தப் போட்டியில் திறமையான ஒருவர் வெல்லப் போகிறார். எனவே மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது தேவையில்லாதது.உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஆதரவளியுங்கள். மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம். ரம்யா பாண்டியனுக்கு ஆதரவு அளித்து வரும் அவரது ரசிகர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement