தனது 3 மாத குழந்தைக்கு பாடும் ட்ரைனிங்கை ஆரம்பித்த ரம்யா – வீடியோ இதோ.

0
44540
ramya
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் . அதில் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தான் ரம்யா, என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்தது.பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்டவர்.

-விளம்பரம்-

அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் தனது முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.பாடகி ரம்யா, கடந்த ஆண்டு விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் போன்ற முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டு இருந்தனர்.

- Advertisement -

ரம்யா திருமணம் செய்துகொண்ட நடிகர் சத்யா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் ஜெய்சூர்யா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ரம்யாவிற்கு குழந்தை பிறந்தது.

இப்படி ஒரு நிலையில் ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது 3 மாத மகனுக்கு பாடும் ட்ரைனிங்கை ஆரம்பித்துள்ளார் ரம்யா. மேலும், தனது மகனுக்கு என்று ‘Ryan’ பெயரை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ரம்யா.

-விளம்பரம்-
Advertisement