பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 வது வாரம் வெளியேற்றபட்ட ரம்யா, பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை அனைத்து போட்டியாளர்களையும் அனுசரித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்துடனே வெளியேறினார் ரம்யா, இவருக்கு பின் வெளியே வந்த ஷாரிக், வைஷ்ணவி ஆகியோரும் வெளியே வந்தவுடன் ரம்யாவை நேரில் சந்தித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத்திற்கு, ரம்யா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும், மஹத்திடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ரம்யா, மஹத் மிகவும் நல்லவன் என்றும் யாஷிகவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜ் மீதிருந்த தனிப்பட்ட கோவத்தை மஹத்தை வைத்து பயன்படுத்தி மும்தாஜை பழி வங்கிவிட்டனர் என்றும் அந்த வீடியோ பதிவில் ரம்யா தெரிவித்துள்ளார். இதோ, ரம்யா பேசிய அந்த ட்விட்டர் வீடியோ பதிவு.For all your questions about Mahat and Mumtaz, this is my answer! :)) #BiggBossTamil #BiggBoss2 #BiggBossTamil2 #biggbosstamil2 #BiggBoss @MahatOfficial #mumtaz pic.twitter.com/xA5LUyIYLn
— Ramya NSK (@SingerRamya) August 27, 2018





