இறங்கி செய் அக்கானு சொன்ன – ஆரி பற்றி பேசிய ரம்யா. பூரிப்பில் அவரது தம்பி போட்ட பதிவு.

0
8364
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. இருப்பினும் இவரது ஒரு சில செயல்பாட்டினால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் சில ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் ஆரியை தொடர்ந்து டார்கெட் செய்து வருவதாக ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

- Advertisement -

அதிலும் கடந்த சில வாரங்களாகவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட ஆரி என்ன செய்கிறார் என்பதை தான் ரம்யா பாண்டியன் உன்னித்து கவனித்து வருகிறார். மேலும், ஆரியிடம் யாராவது சண்டை போட்டால் அவருக்கு ஆதரவாக ரம்யா பாண்டியன் களம் இறங்கி விடுகிறார். அதிலும் கடந்த சில வாரங்களாக ஆரிக்கு ரம்யா பாண்டியனுக்கும் கடுமையான பிரச்சனைகள் போய்க்கொண்டு இருக்கிறது. இதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அணிந்திருக்கும் முகத்திரையை கிழித்து தங்களுடைய கருத்தை சொல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆரி பற்றி பக்கம் பக்கமாக குறைகளை அள்ளி வீசி இருந்தார். ரம்யா பாண்டியன் ஆரி பற்றி பேசியதை சிலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் இருந்த நிலையில் ரம்யா பாண்டியன் சகோதரர் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில்

-விளம்பரம்-

ஆரியின் சகோதரர் Freeze Task -ன் உள்ளே சென்ற போது என் தலைவன் ஆரி எங்கே என்று தேடிப்பிடித்து கை குலுக்கி வந்தார். அதே போல ரம்யா பாண்டியனை ஆரி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் திட்டித் தீர்த்த போது சமூக வலைதளத்தில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டிய பரசு, ஒரு பெண் என்றும் பாராமல் கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஆரியே இதுபோன்ற விமர்சனங்களைப் பார்த்தால் தனது ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தப்படுவார் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement