பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் திகந்து வருகிறது. அதிலும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்தியா முழுவதும் உள்ள பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வருடம் வருடம் ரசிகர்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்புகளுடனும், ஆவலுடனும் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்தியில் பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரபலம் ஒருவர் பாதியிலேயே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியில் மிக பிரபலமான போட்டியாளராக திகழ்ந்து வருபவர் Raqesh Bapat. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக திறமையாக விளையாடி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு ஏற்கனவே இருக்கும் கல் பிரச்சனை தற்போது உடல் உபாதைகளை கொடுத்திருக்கிறது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருக்கிறார். மேலும், Raqesh Bapat அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் Raqesh Bapat கூடிய விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்களும் பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள். இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. கடந்த நான்கு சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கின்றனர். இந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.