‘வாஷிங் பவுடர் நிர்மா ‘ – 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த ஷெரினின் வீடியோ.

0
10321
sherin

தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செரின் ஷிருங்கார். அதனை தொடர்ந்து இவர் ஸ்டுடென்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், நண்பேண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் மாடலாக தான் இருந்தார். பின் நடிகையாக ஆனார். இவர் தன்னுடைய பதினாறு வயதிலேயே தர்ஷன் என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் ஷெரினை ரசிகர்கள் மறந்திருந்த நிலையில் இருந்தார்கள். பின் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷெரின் கலந்து கொண்டார். அதுமட்டு இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சூப்பராக விளையாடினார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் அவர்கள் மீண்டும் தமிழ் இளைனர்கள் மனதை கொள்ளை அடித்தார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடப்பதால் ஷெரின் அவர்கள் டிக்-டாக்கில் வீடியோக்களை வாரி வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை ஷெரீன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் 90 காலகட்டத்தில் வந்த வாஷிங் பவுடர் நிர்மா என்ற பவுடர் விளம்பரத்திற்கு டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் மூலம் நடிகை செரின் அவர்கள் 90 கிட்ஸ்களை கவர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement