பிக் பாஸ் போனா ஸ்டார் ஆகிட முடியாது, சனம் சண்டை போட்டது இதுக்கு தான் – இரண்டு ஆண்டு கழித்து சொன்ன ரேகா.

0
554
rekha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ரேகா. இவர் தமிழில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினி, கமல், சத்யராஜ் என பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் டீச்சர் என்றால் முதலில் நினைவிற்கு வருவது ரேகா தான். 1986 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் என்ற டீச்சராக ரேகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது புன்னகை மன்னன் படம் தான். அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், திருமணத்திற்கு பின் இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சீரியல், நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பங்கு பெற்று வருகிறார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரேகா போட்டியாளராக பங்கு பெற்றார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரேகா:

ஆனால், இவர் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக இவர் “பியார் ப்ரேமா காதல்” இறுதியாக ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இவர் யூடியூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ரேகா அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

ரேகா அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த 100 நாட்களும் சூழல்களை தூண்டி விட்டு ஒரு பரபரப்பை உருவாக்குகிறார்கள். உதாரணமாக சனமாக இருக்கட்டும், வேறு யாராகவும் இருக்கட்டும் சண்டை போடுவது வரை பாருங்கள். அதுதான் மக்களுக்கு பிடிக்கிறது. அதனால் தான் சண்டை போடும் சூழல்களை அங்கே உருவாக்குகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி சண்டைகள் நடக்கும். வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி, ஞாயிறு மாறிவிடுவார்கள். இப்படியே தான் போய்க் கொண்டிருக்கும். பிக் பாஸ் வீட்டில் ஒரு நூறு நாட்கள் தான் பிரபலமாக இருக்க முடியும். பிக் பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரேகா சொன்னது:

ஆனால், வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யார் சொல்லியும் கொடுப்பதில்லை. இந்த நிலையில் பொறுமையாக இருந்து தான் நம்மை யார் என்று காண்பிக்க வேண்டும். நான் அங்கிருந்த 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன். எதையாவது சாதித்த பிறகு தான் மிகவும் அர்ப்பணிப்புடன் பொறுமையாக இருக்க வேண்டும் என்று தான் நான் அடிக்கடி சொல்லுவேன்.நான் நடித்த படங்களில் எல்லா படப்பிடிப்புகளும் சரியான நேரத்தில் சென்று பொறுமையாக இருந்தால் தான் என்னால் இதை செய்ய முடிந்தது. பொறாமை எண்ணங்களோ, கர்வமோ நமக்குள் இருக்கக் கூடாது.

வைரலாகும் ரேகா அளித்த பேட்டி:

நான் இவ்ளோ பெரிய ஆள்? நான் ஏன் 17 பேருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும்? இப்படி எல்லாம் நினைக்க கூடாது. அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தேன். நாம் எப்போதும் சும்மா இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வேலையை செய்து இயங்கிக்கொண்டே இருக்கனும். தற்போதுகூட எனக்காகவே நான் ‘ரேகாஸ் டைரி’ என்ற பெயரில் யூடியூப் சேனலை துவங்கி நடத்தி வருகிறேன். அது போல எப்போதும் நம்முடைய நம்பிக்கையை கைவிடக்கூடாது. நம்முடைய அழகையும் பராமரிக்க வேண்டும். அது தான் நமது பலம். அது தான் நான் எப்போதும் இளமையாக உணர்வதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார். இப்படி ரேகா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement