ஏன் உங்கள ஒன்னா பாக்க முடியல ? தனது தம்பி பாபி சிம்ஹா குறித்து முதன் முறையாக பேசிய ரேஷ்மா.

0
2739
Reshma
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாபி சிம்மா. இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார் இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்தது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜிகிர்தண்டா படம் தான். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சேது என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பாபி சிம்மா அவர்கள் ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் பாபி சிம்ஹாவின் மாஸ் லூக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சிறந்த நடிகர் பாபி சிம்ஹா :

இறுதியாக விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தில் நடித்து இருந்தார் பாபி சிம்ஹா. மேலும், இவர் இனிது இனிது படத்தில் நடித்த ரேஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால், இவர் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ரேஷ்மாவின் உடன் பிறந்த சகோதரர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஆனால், இதுவரை அதை பெரிதாக சொல்லிக்கொண்டது இல்லை பாபி சிம்ஹா.

ரேஷ்மா பாபி சிம்ஹா உறவு :

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி. மேலும், வம்சம்’, `வாணி ராணி’, `ஆண்டாள் அழகர்’, `மரகத வீணை’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் ரேஷ்மா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போது ரேஷ்மா தனது குடும்ப வாழ்கை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

பாபி சிம்ஹா குறித்து ரேஷ்மா :

ஆனால், இவர் பிரபல நடிகர் பாபி சிம்மாவின் தங்கை என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். அதே போல பாபி சிம்மாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. பிக் பாஸுக்கு பின் பேட்டி ஒன்றில் பேசிய ரேஷ்மா,ரேஷ்மா, பாபி சிம்ஹா குறித்து பேசுகையில், என்னை எதாவது பேசுவாங்களே’ என்பதற்காகவே இங்கிருக்கும் சொந்த பந்தங்களுடைய விசேஷங்களுக்கு பெருசா போனது இல்ல. பாபி சிம்ஹா எனக்கு தம்பி முறைதான். சின்ன வயசுல நாங்க 25, 30 பேர்னு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம்.

நாங்கள் ஏன் விளம்பரபடுத்த வேண்டும் :

இப்போதும், அப்படியே இருந்திருக்கலாமேனு யோசிப்பேன். அதெல்லாம் அழகான நினைவுகள் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரேஷ்மா, நாங்கள் வீட்டில் மீட் பண்ணுவோம். நாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் நிறைய இருக்கிறது. அதுவும் எதாவது பார்ட்டியில் எடுத்த போட்டோவாக தான் இருக்கும். நாங்கள் ஒரு குடும்பம் அதை ஏன் விளம்பரபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement