இடுப்பில் இருக்கும் Tattoo குறித்து பேட்டியின் போது கேட்ட நபர் – ரேஷ்மா கொடுத்த பதில். வீடியோ இதோ. 

0
1286
reshma
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார். இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக மீடியாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் வம்சம், மரகத வீனை, பகல் நிலவு போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்து இருக்கிறார். அதேபோல் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசாலா படம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

இதையும் பாருங்க : இப்படி தான் ‘பீஸ்ட்’ தங்கச்சி செண்டிமெண்ட்னு சொன்னீங்க’ விக்ரம் படத்திற்கு முன் வாலைபேச்சு கொடுத்த அப்டேட் வீடியோவை தற்போது வச்சி செய்யும் ரசிகர்கள்.

- Advertisement -

ரேஷ்மா நடித்த படங்கள்:

அதைத் தொடர்ந்து இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். முதல் படத்திலேயே ‘புஷ்பா புருஷன்’ காமெடி மூலம் மக்களிடையே நல்ல பெயரை பெற்று இருந்தார் ரேஷ்மா. இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

ரேஷ்மா நடிக்கும் சீரியல்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதன் பின் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் திடீரென்று இந்த சீரியலில் இருந்து ரேஷ்மா விலகிவிட்டார். இவருக்கு பதிலாக பிரசாந்த் பட நடிகை வினோதினி நடித்து வருகிறார். அதன் பின் நடிகை ரேஷ்மா விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ரேஷ்மா அளித்த பேட்டி:

இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் அபி டைலர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். மேலும், இறுதியாக இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ளே, பேய் மாமா படத்தில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டும் வருகிறார். இந்த நிலையில் ரேஷ்மா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

Reshma

டாட்டூ குறித்து ரேஷ்மா சொன்னது:

அதில் இவருடைய ரசிகர்களும் கலந்து கொண்டு அவரிடம் பல கேள்விகள் எழுப்பினார்கள். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுடைய இடுப்பில் இருக்கும் டாட்டூ குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள்? அதற்கு ரேஷ்மா சிரித்துகொண்டே, அந்த டாட்டூவை நீங்கள் முழுதாக பார்த்திருக்க முடியாது. ஏனென்றால், அது கொஞ்சம் பெரிய டாட்டூ. இரண்டு அழகான ரோஜாக்கள் தான். இது romanceக்காக தான் நான் போட்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement