‘இப்படிதா ‘பீஸ்ட்’ தங்கச்சி செண்டிமெண்ட்னு சொன்னீங்க’ விக்ரம் படத்திற்கு முன் வாலைபேச்சு கொடுத்த அப்டேட் வீடியோவை தற்போது வச்சி செய்யும் ரசிகர்கள்.

0
486
valaipechu
- Advertisement -

விக்ரம் படம் குறித்து வலைப்பேச்சு சேனல் பதிவிட்டு இருந்த வீடியோவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

இதையும் பாருங்க : காதலில் இருப்பதை உறுதி செய்த அனுபமா பரமேஸ்வரன் – பும்ரா குறித்து சொன்னது என்ன ?

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை:

படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. நான்காண்டுகளுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தில் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவரை அடுத்து அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார்.

விக்ரம் படம் குறித்த தகவல்:

படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படம் குறித்து வலைப்பேச்சு சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

-விளம்பரம்-

வலைப்பேச்சு சேனல் வெளியிட்ட வீடியோ:

அதில், விஜய் சேதுபதி மிகப்பெரிய தீவிரவாதியாக இருக்கிறார். அதனால் அவர் கைதியாக ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியே கொண்டு வர பகத் கைதியாக உள்ளே செல்கிறார். இந்த திட்டங்களை எல்லாம் தெரிந்து கொண்ட கமலஹாசனும் ஜெயிலுக்கு செல்கிறார். மிக பிரம்மாண்டமாக லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார் என்றெல்லாம் கூறி இருந்தார்கள். இப்படி இவர்கள் கூறியிருந்த வீடியோவை தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு, கொஞ்சம் கூட இவர்கள் சொன்னதற்கும் விக்ரம் படத்தின் கதைக்கும் சம்பந்தமே கிடையாது.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்:

கதை சொல்கிறோம் என்ற பெயரில் இவங்க மூணு பேரும் சேர்ந்து செய்த அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் இருக்கிறது. அதிலும் சிலர், ஒரு மயிரும் தெரியலைனா கூட தெரிஞ்ச மாதிரி சொல்றீங்க பார்த்தீர்களா! என்று தாறுமாறாக வறுத்து எடுத்து வருகிறார்கள். இன்னும் சிலர், படத்தின் கதை பற்றி சொன்னது கூட கவலையில்லை. ஆனால், Bismi ஸ்டோரிய சொன்னதால தான் லோகேஷ் டெல்லியில் போய் ஸ்கிரிப்ட் ரெஜிஸ்டர் பண்ணாரு என்று சொன்னாங்க பாரு! அத தாண்டா என்னால மன்னிக்கவே முடியாது என்று வலைப்பேச்சு சேனலை தாறுமாறாக நெட்டிசன்கள் ரசிகர்களும் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

Advertisement