இதல கூட பப்லிசிடியா – ரசிகரின் கமன்ட்டால் கதறி அழுத சஞ்சனா மற்றும் ரேஷ்மா.

0
3906
Reshma

கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் திரையுலகில் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றார்கள். சமீபத்தில் பாலிவுட்டில் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருந்த இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார். தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். சுஷாந்த் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் நடிகர் சுஷாந்த் கடந்த சில வாரமாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக அவர் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுவந்தார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை திரையுலக பிரபலங்களாலும், ரசிகர்களாலும் நம்ப முடியவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் உடலை போலீஸ் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமூக வலைத்தளங்கள் மூலமாக நடிகைகள், நடிகர் என பலரும் சுஷாந்த் சிங் மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நடிகை ரேஷ்மா மற்றும் நடிகை சஞ்சனா இருவரும் சுஷாந்த் ஷெட்டிக்கு இரங்கல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

வீடியோவில் 4 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இரங்கல் தெரிவிக்க கூட மேக்கப் போட்டுக்கிட்டு தான் வருவீங்களா? என்று தாறுமாறாக கலாய்த்து உள்ளனர். இதை பார்த்து கடுப்பான நடிகை ரேஷ்மா மற்றும் நடிகை சஞ்சனா இருவரும் நாங்கள் பப்ளிசிடிக்காக பண்றோமா? மேக்கப்ப் போட்டிருக்கோமா? லிப்ஸ்டிக் கூட போட வில்லை. இப்படி ஒருவரை பற்றி அவதூறாக பேசாதீர்கள் என்று கதறி அழுது உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement