அடிக்கடி மீரா மிதுனை வறுத்தெடுத்து வந்த ஜோ மைக்கேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிக் பாஸ் நடிகை. யார் தெரியுமா ?

0
1295
joe-Michel
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர் தான் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் என்ற அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவர் மீது தொடரப்பட்ட பல்வேறு மோசடி வழக்கு காரணமாக அந்த பட்டம் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி இடம் ஒப்படைக்கப்பட்டது.

Joe-michel

இருப்பினும் நான் தான் இன்னமும் 2016ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகி என்றும், அந்தப் படம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கூறிவருகிறார். மீரா மிதுன் நிகழ்ச்சிக்கு வருவதற்க்கு முன்பாகவே இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தது. மாடல் அழகி என்ற பெயரில் இவர் பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது. இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பெரும் சர்ச்சையில் சிக்கி இருந்தார் மீரா மிதுன்.

- Advertisement -

மேலும், மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், அடிக்கடி பல பேட்டிகளில் பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து இழிவாகவும், பெண்களை தரை குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கேல் மீது புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறை சென்று ஜாமினில் வெளியில் வந்தார்.

இந்த நிலையில் ஜோ மைக்கேல் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரேஷ்மா, ஜோ மைக்கேலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை மீரா மிதுனுக்கு சாக்ஷி மற்றும் அபிராமியுடன் தான் அதிக பிரச்சனை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement