புடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு ரேஷ்மா கொடுத்த போஸ்.

0
2917
reshma
- Advertisement -

“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்தவர். இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பின் இவர் வம்சம், வாணி ராணி, ஆண்டாள் அழகர், மரகத வீணை போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமானார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி அவர்கள் தனது உடல் எடை குறைத்துள்ளார். அவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிக்க வைக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் சேலையில் பயங்கர கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்களில் யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க? என்று கண்றாவியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவர் வேறொரு நபரை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. பின் அந்த நபருடன் இவருக்கு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகின்றது.

-விளம்பரம்-
Advertisement