ராதிகா உதடு ஏன் உங்க வீங்கி இருக்கு, கோபி எதனா பண்ணாரா ? ரசிகரின் கமெண்டை படித்த ராஜு.

0
131
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் உதடு குறித்து ராஜூ பயங்கரமாக கலாய்த்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான். தற்போது சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா? பாக்கியா எடுக்கும் முடிவு என்ன? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

ரேஷ்மா குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் ஏற்கனவே சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதுவும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் படு ஃபேமஸானார். அதன்பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். பின் ரேஷ்மா சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ராஜு வூட்டுல பார்ட்டி :

பின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதைக் கொள்ளை அடித்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரேஷ்மாவின் உதடு குறித்து ராஜீ கிண்டல் செய்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் தற்போது ராஜு வூட்டுல பார்ட்டி என்ற புது நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதை ராஜு தான் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரேஷ்மா, ஈரமான ரோஜாவே கேப்ரில்லா, ஜூலி ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர். அப்போது பாக்யலட்சுமி சீரியலை பற்றி வந்த கமெண்டை ராஜூ படித்து காண்பித்து இருந்தார்.

ரேஷ்மாவை கிண்டல் செய்த ராஜு:

அதில், லிப்ஸ்டிக் போட்டு ராதிகா உதடு வீங்கி விட்டது.சகிக்கல, என ஒருவர் கமெண்ட் செய்ததாக ராஜு சொன்னார். அதற்கு லிப்ஸ்டிக் காரணம் இல்லை என ரேஷ்மா பதில் அளித்தார்..உடனே ராஜூ, கோபி எதாவது பண்ணாரா என கிண்டலாக கேட்டார். அதற்கு ரேஷ்மா, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அந்தளவுக்கு சீரியல் கிடையாது, 8.30 மணிக்கு வர சீரியல். குடும்பங்கள் பார்க்கும் சீரியல் என்று கூறுகிறார். காதலுக்கு எண்ணங்க நேரம் என்று மீண்டும் கலாய்க்கிறார் ராஜு.

Advertisement