நீங்க ஒரு தெலுங்கு பெண். அப்புறம் ஏன் இத பண்ண மாட்றீங்க – ரசிகரின் கேள்விக்கு ரேஷ்மா அளித்த பதில்.

0
2015
Reshma
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ‘ புஸ்பா புருஷன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையை அதிகமாகப் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. ரேஷ்மா சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா தெலுங்கு தயாரிப்பாளர் ஆவார். இவர் முதலில் விமானத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர்,படிப்படியாக முன்னேறி சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ரேஷ்மா அவர்கள் செய்திவாசிப்பாளர், நடிகை, மாடலிங், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலம் ஆனார்.அதோடு முதலில் ரேஷ்மா அவர்கள் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். இதனை அடுத்து இவர் சினிமா துறையில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

இதற்கு பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரேஷ்மா ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது அவர் டிவி சேனலில் காமெடியில் ‘என்னம்மா இப்படி பண்றிங்களேமா’ டயலாக் இன் மூலம் பிரபலமான ராமருடன் இணைந்து படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. மேலும், இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார் ரேஷ்மா.

சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் ஒரு தெலுங்குப் பெண் உங்கள் தந்தையும் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆனால் நீங்கள் தெலுங்கு படங்களில் எந்த ஒரு ஆர்வம் காட்டுவதில்லை இதைப்பற்றி தயவுசெய்து யோசியுங்கள்’ என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு ரேஷ்மா ‘நான் ஏற்கனவே தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார். நடிகை ரேஷ்மா பிரபல நடிகரான பாபி சிம்ஹாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement