விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அதுவும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பெரும் வெற்றியடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகளும் பங்கு பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரேஷ்மாவும் ஒருவர். “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதிலும் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்துகொடுத்தது.
அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமானார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அதுவும் சமீப காலமாக இவர் உடல் எடையை கணிசமாக குறைத்து வந்ததிலிருந்து அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர்