அட, பிரபல தமிழ் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள ரேஷ்மா. இதோ புகைப்படம்.

0
1085
Reshma

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. ஆனால், அதற்கு முன்பாகவே “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார். இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர்.ஆரம்பத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக இருந்துள்ளார் ரேஷ்மா.

அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் வம்சம், மரகத வீனை,பகல் நிலவு போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். தற்போது அன்பே வா கண்ணான கண்ணே, வேலம்மாள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசாலா படம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – தளபதி ஸ்டைலில் பதில் அளித்த ஷிவாங்கி. இவங்கள போய் சின்ன பொண்ணுன்னு சொல்றாங்களே.

- Advertisement -

அதைத் தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடிப்பார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். முதல் படத்திலேயே ‘புஷ்பா புருஷன்’ காமெடி மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதுமட்டுமல்லாமல் இவர் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இறுதியாக இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ளே படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் ‘பேய் மாமா’ படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement